உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

சாலை​யில் ஓடும் கழிவு நீர்

​ பண்​ருட்டி,​​ டிச.​ 13:​ 
 
                          பண்​ருட்டி நக​ராட்சி 29-வது வார்​டில் சுகா​தார வளா​கத்​தின் கழிவு நீர் தேங்கி குளம் போல் நிற்​ப​தா​லும்,​​ வீடு​க​ளில் இருந்து வெளி​யே​றும் கழிவு நீர் சாலை​யில் தேங்​கி​யுள்​ள​தா​லும் நோய் பர​வும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது.​
 
                          29-வது வார்டு சத்​தி​ய​மூர்த்தி தெரு கடை​சி​யில்,​​ அய்​ய​னார் கோயில் தெரு உள்​ளது.​ 100-ம் மேற்​பட்ட குடும்​பத்​தி​னர் வசித்து வரும் இப்​ப​கு​தி​யில்,​​ சல​வைத் தொழி​லா​ளர் குடி​யி​ருப்​பும்,​​ புகழ் பெற்ற அய்​ய​னார் கோயி​லும் அமைந்​துள்​ளது.​ ​நக​ராட்சி நிர்​வா​கத்​தால் 2005-ம் ஆண்டு கட்​டப்​பட்ட சுகா​தார வளா​கத்​தின் கழிவு நீர்த் தொட்டி கடந்த இரு ஆண்​டு​க​ளுக்கு முன்​னரே நிரம்பி கழிவு நீர் வெளி​யேறி அப்​ப​கு​தி​யில் குளம் போல் தேங்கி நிற்​கின்​றது.  ​ இத​னால் அப்​ப​கு​தி​யில் துர்​நாற்​றம் வீசு​வ​து​டன்,​​ நோய் பரப்​பும் கிரு​மி​கள் உற்​பத்​தி​யா​வ​தால் அப்​ப​குதி மக்​கள் பாதிப்​ப​டைந்​துள்​ள​னர்.​ மேலும் பல ஆண்​டு​க​ளாக தேங்கி நிற்​கும் கழிவு நீரால் நிலத்​தடி நீர் மாசு அடைந்து வரு​கி​றது.​  ÷இது குறித்து நகர நிர்​வா​கத்​தி​டம் முறை​யிட்​டும் எந்த வித நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்லை என அப்​ப​குதி மக்​கள் குற்​றம் சாட்​டு​கின்​ற​னர்.​ 
 
                        மே​லும் சல​வைத் தொழி​லா​ளர் குடி​யி​ருப்​பில் உள்​ள​வர்​க​ளின் தண்​ணீர் தேவைக்​காக ​ அமைக்​கப்​பட்ட கைப் பம்பை சுற்​றி​லும் கழிவு நீர் தேங்கி நிற்​ப​தால் பய​னற்று போய் உள்​ளது.​
 
                       இ ​தே​போல் சத்​தி​ய​மூர்த்தி தெரு​வில் முறை​யாக கழிவு நீர் கால்​வாய் பரா​ம​ரிக்​கப்​ப​டா​த​தா​லும்,​​ கால்​வாய் இல்​லா​த​தா​லும் கழி​வு​நீர் சாலை​யில் வழிந்​தோடி அங்​காங்கே தேங்கி நிற்​கி​றது.​ இத​னால் சாலை​யில் தேங்​கி​யுள்ள கழிவு நீரில் நடந்து செல்​லும் பரி​தாப நிலை​யில் பொது மக்​கள் உள்​ள​னர்.​  பண்​ருட்டி நக​ரப் பகு​தி​யில் பருவ நிலை மாற்​றத்​தா​லும்,​​ சுகா​தா​ர​மற்ற சூழ​லா​லும் பலர் பாதிக்​கப்​பட்​டுள்​ள​னர்.​ இந்​நி​லை​யில் கடந்த சில தினங்​க​ளுக்கு முன்  26-வது வார்டு விழ​மங்​க​லம் பகு​தி​யில் மாச​டைந்த குடி​நீர் மற்​றும் சுகா​தா​ர​மற்ற சூழ​லால் வாந்தி-​பேதி ஏற்​பட்​டது.​   இதில் பாதிக்​கப்​பட்ட முதி​ய​வர் ரங்​க​நா​தன் சிகிச்சை பல​னின்றி இறந்​தார்.​   மேலும் ​ 60-க்கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வந்​த​னர்.​ இத​னால் பண்​ருட்டி பகு​தி​யில் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​
 
                    இந் ​நி​லை​யில் அய்​ய​னார் கோவில் தெரு​வில் உள்ள சுகா​தார வளா​கத்​தில் இருந்து வெளி​யேறி தேங்கி நிற்​கும் கழிவு நீரை வெளி​யேற்றி சுத்​தம் செய்து,​​ சாலை​யில் கழிவு நீர் தேங்​கா​வண்​ணம் இருக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என அப்​ப​குதி மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ள​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior