உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

திருவாமூர் மலட்டாறு ஆக்கிரமிப்பு: நிலத்தடி நீர் சேமிக்க முடியாத நிலை

பண்ருட்டி :

                   திருவாமூரில் மலட்டாற்றை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளதால் நிலத்தடி நீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த திருவாமூர் ஊராட்சி பகுதியில் உள்ள மலட் டாறு பகுதி முழுவதும் விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து பயிர் செய்துள் ளனர். நத்தம் ஏரியில் இருந்து பிரிந்து வரும் தண்ணீர்  திருவாமூர் மலட்டாறு சப் டிவிஷன் ஆற்றுக்கு வருகிறது.

            மலட்டாறு தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்பாளர்கள் பல ஆண்டாக பயிர் செய்து வருகின்றனர்.  தற்போது ஆற்றில் தண்ணீர் செல்லும் பகுதியில் களிமண் கொட்டி ஆக்கிரமித்து சவுக்கை, மணிலா உள்ளிட்ட பயிர்கள் செய்து வருகின்றனர்.மணல் பகுதியில் களிமண் அடித்து பயிர் செய்வதால் மழை நேரத்தில் ஆற்றில் வரும் தண்ணீர் மணலில் நீரை சேமிப்பது போல் களிமண்பகுதி கலந்த பகுதியில் நீரை சேமிக்க முடியவில்லை. இதனால் மழைகாலங்களில் வரும்  வெள்ள நீர் கெடிலம் ஆற்றுவழியாக வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது.

                 இதனை தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு அதிகாரிகளும், வருவாய் துறையினரும் கண்டுகொள்வதில்லை. நிலத்தடி நீர் உள்வாங்கியதால்  விவசாய பம்ப் செட்டுகள் அடிக்கடி பழுதாகிவிடுகிறது. பல இன்னல்களுக்கிடையே விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மேலும் போர் பைப்பை பாதாளத்திற்கு  சென்று தண்ணீர் எடுத்து பயிர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இதற்கு ஆறு, ஏரி, குளம் உள் ளிட்ட நீர்வழிபுறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிலத்தடி நீரை சேமிக்க முடியும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior