காட்டுமன்னார்கோவில் :
காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரி கிராம மக்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு சேவாதள கூடுதல் தலைமை அமைப்பாளர் சரவணகுமார் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலவரத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 375 குடும்பங்களை அரசு அதிகாரிகள் எள்ளேரி கிழக்கு என்ற கிராமத்தை உருவாக்கி சாலை ஓரத்தில் வசித்து வர செய்தனர். அவர்கள் 575 ரேஷன் கார்டுகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களில் 100 பேருக்கு மட்டும் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் அகலப்பாதை அமைக்க பணிகள் தொடங்க இருப்பதால் அவர்களை காலி செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களாக 475 குடும் பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா கொடுத்து உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக