திட்டக்குடி :
சூனியத்தை அகற் றுவதாக கூறி நகை, பணத்துடன் தப்பியோடிய பெண்ணை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்த வாகையூரை சேர்ந்தவர் அச்சுதன் (80). முன்னாள் ராணுவ வீரரான இவர், உடல் நிலை சரியில்லாத தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை அச்சுதன் வீட் டிற்கு வந்த பெண் ஒருவர், வீட்டில் பில்லி, சூனியம் இருப்பதால் தான், உங்கள் மனைவி படுக்கையில் இப்பதாகவும், பூஜை செய்து அகற்றுவதாக கூறினார்.
அச்சுதன் ஒப்புக் கொண்டதும், அந்த பெண் வீட்டிற்குள் பூஜை செய்து, விபூதி கொடுத்து பணம், நகைள் மீது தடவுமாறு கூறினார். அதன்படி அச்சுதன் பெட்டியில் வைத்திருந்த 21 ஆயிரம் பணம், 4 சவரன் செயின் மீது விபூதி தடவினார். பின் வீட்டின் பின் னால் சென்று சூடத்தை ஏற்றிவிட்டு உள்ளே வந்தார். அப்போது, அப் பெண் பணம் மற்றும் நகைகள் இருந்த அறையிலிருந்து வெளியே வந்ததை கண்டு அச்சுதன் கேட்டார். உடன் அச்சுதனை தள்ளிவிட்டு பின்புறமாக ஓடினர். அச்சுதன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விரட்டினர். அப்பெண், பணம் மற்றும் நகைகள் வைத்திருந்த பையை வீசிவிட்டு ஓடி வெள் ளாற்றில் உள்ள "நாணல்' புதரில் மறைந்துக் கொண் டார். அவரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், திட்டக்குடி அடுத்த பட்டூர் செல்வராஜ் மனைவி வளர்மதி (35) என்பதும், இரண்டு நாளாக பருத்தி செடிக்கு களை பறிப்பது போல நோட்டமிட்டு, திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். பில்லி சூனியத்தை அகற்றுவதாக கூறி பெண் ஒருவர் துணிச்சலாக நகையை திருடிக் கொண்டு ஓடிய சம்பவம் வாகையூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போதை ஏறியதால் சிக்கினார்: அச்சுதன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதால் மிலிட்டரி மதுபானம் வீட்டில் இருந்துள்ளது. பணம், நகையை கொள்ளையடித்த வளர் மதி, வீட்டிலிருந்த மிலிட் டரி மதுபானத்தை "ராவாக' குடித்துள்ளார். போதை அதிகமானதால் தப்பியோட முடியாமல் மக்களிடம் சிக்கிக் கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக