கிள்ளை :
மீனவர்களுக்கு அடை யாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி துவங்கியது.சிதம்பரம் அருகே முடசல் ஓடை, சூரியா நகர், கூழையார் மீனவர்களுக்கு மாவட்ட மீன்வளத்துறை சார்பில் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து முடசல் ஓடை பகுதியில் உள்ள மூன்று மீனவ கிராமங்களைச் சேர்ந்த கடல் தொழிலுக்கு செல்லும் மீனவர்களுக்கு அடை யாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணி துவங்கியது. முடசல் ஓடை கிராமத் தலைவர் நல்லரையன் தலைமை தாங்கினார். விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் அறிவழகன், துணைத் தலைவர் ரவி,பொருளாளர் பத்மராஜ், சூர்யா நகர் தலைவர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர்.மீனவர் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி புகைப்படம் எடுக்கும் பணியை துவக்கி வைத் தார். மூன்று கிராமங்களில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக