உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

வக்கீல்கள், குமாஸ்தாக்கள் மூன்று நாள் வேலை நிறுத்தம்

கடலூர் :

                வக்கீல்கள் மற்றும் குமாஸ்தாக்கள் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் தலைவர் லோகநாதன், செயலாளர் துரை பிரேம் குமார் தலைமையில் கடலூரில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சேம நல நிதி 2 லட்சம் ரூபாயை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தக் கோரி தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.அதன்படி நேற்று 29 முதல் 31ம் தேதி வரை வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இவ்வேலை நிறுத்தத்தில் 1,000க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஈடுபட்டதால் கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டது.

               குமாஸ்தாக்கள் சங்கம்: கடலூர் வக்கீல் குமாஸ்தாக்கள் சங்கம் சார்பில் சேம நல நிதியை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தக் கோரி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாநில நல நிதி தலைவர் நடராஜன் தலைமையில் கடலூர் சங்க தலைவர் வசந்தகுமார் முன்னிலையில் 60 பேர் பணிகளை புறக்கணித்தனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. தொடர்ந்து இன்றும் 30ம் தேதி, நாளையும் 31ம் தேதியும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. வேலை நிறுத்தம் காரணமாக கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior