கடலூர் :
போலீஸ் துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக நேர்மையாக பணி புரிய சபதம் எடுக்க வேண்டும் என டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசினார். கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., மாசானமுத்து கடந்த 17ம் தேதி முதல் ஆய்வு மேற் கொண்டு வருகிறார். நேற்று ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, தீவிரவாதிகளிடம் இருந்து "வி.ஐ.பி.,'க்களை பாதுகாப்பது, காரில் வந்து தாக்க முயற்சிக்கும் தீவிரவாதிகள் மற்றும் பதுங்கியிருந்து தாக்கும் தீவிரவாதிகளை அழிக்கும் முறைகள் குறித்த கமாண்டோ படையினரின் செயல் விளக் கத்தை பாராட்டினார்.
பின்னர் நடந்த விழாவில் டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசியதாவது:
ஆண் போலீசாரைவிட பெண் போலீசார் உடைகளை சிறப்பாக வைத்துள் ளனர். கடலூர் மாவட்டம் கம்பீரமான மாவட்டம். கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இந்த மாவட்டத்தில் ஜாதி மோதல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகம் நடந்துள்ளது. சிறு பிரச்னை கூட பெரிய மோதலில் முடியும். தீவரவாதத்திற்கும் பெயர் பெற்ற மாவட்டம். மாவட் டத்தில் முன்பு பணி புரிந்தவர்கள் தற்போது உயர் அதிகாரிகளாக உள்ளனர். பொது மக்கள் போலீஸ் துறையை நேசிப்பது குறைவாக உள்ளது.
போலீஸ் துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக நேர்மையாக பணிபுரிய நாம் சபதம் எடுக்க வேண்டும். ஏழை மக்களுக்கு நன்மை செய்து பணிக்கு சிறப்பு சேர்க்க வேண்டும்.நீங்கள் அனைவரும் செல்வ சீமான்கள் வீட்டில் பிறந்தவர்கள் அல்ல. போலீசாவதற்கு முன் நீங் கள் எப்படி இருந்தீர்கள் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். கஷ்டத்தை மறந்து பணிபுரிய வேண் டும். தற்போது 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அதனை சேமித்து வைக்கும் பழக் கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த பணத்தில் பெற்றோர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
நல்லது செய்ய பல இடையூறு வரும். அதனையும் மீறி நேர்மையாக செயல்பட வேண்டும். நான் அதிகம் நேசிப்பது கடலூர் மாவட்டம். 20 ஆண்டிற்கு முன் விருத்தாச் சலத்தில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்தேன். தற்போது டி.ஐ.ஜி., யாக வந்து ஆய்வு செய்வதை பெருமையாக கருதுகிறேன். நீங் கள் சிறப்பாக பணி புரிந்து போலீஸ்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.அப்போது எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷ், ஏ.டி.எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி.,க்கள் ஸ்டாலின், அரிகிருஷ்ணன், தனிப்பிரிவு இன்ஸ் பெக்டர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக