பண்ருட்டி :
மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பைகள் விற்பனையை தடை செய்து பண்ருட்டி நகர மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.பண்ருட்டி நகர மன்ற மாதாந்திரக் கூட்டாம் நாளை (31ம் தேதி) காலை 11.30 மணிக்கு நடக்கிறது. சேர்மன் பச்சையப் பன் தலைமை தாங்குகிறார். கமிஷனர் உமாமகேஸ்வரி, துணை சேர்மன் கோதண்டபாணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் மறுசுழற்சிக்கு உபயோகப்படாத 20 மைக்ரான் கீழ் உள்ள பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் பிளாஸ் டிக் பைகள் விற்பனையை தடை செய் வது. திருமண மண்டபங்கள், சிற்றுண்டி, கோழி இறைச்சி கடை, பூக்கடைகளுக்கு மாதாந்திர கூடுதல் சேவை கட்டணம் வசூல் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக