விருத்தாசலம் :
புத்தாண்டு சட்டமன்ற ஆளுநர் துவக்க உரையில் சத்துணவு- அங்கன்வாடி பணியாளரை முழு நேர பணி நிரந்தர அறிவிப்பு அறிவித்திடவேண்டும் என தமிழ் நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் விஜயபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:
பள்ளி சத்துணவு மைய காலிப்பணியிடங்களில் ஆண்களையும் பணி நியமனம் செய்வது, சமூக நலத்துறையில் மட்டும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிநிலை உயர்வு என்பதை விரிவுபடுத்தி அரசின் அனைத்து துறைகளிலும் கல்விதகுதி அடிப்படையில் பணிநிலை உயர்வு வழங்க வேண்டும். பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நிரந்தர பணியிடம் வழங்குவது, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை முழுநேர நிரந்தரப்படுத்துவது, அரசின் அனைத்து துவக்கப்பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., எனப்படும் மழலையர் வகுப்புகளை துவக்குவது மற்றும் அரசு பணிவிதிகளை சத்துணவு பணியாளர்களுக்கும் ஏற்படுத்துவது உள் ளிட்ட அறிவிப்புகளை சட்டசபை கவர்னர் துவக்க உரையில் அறிவித்திட முதல்வர் ஆவன செய்திட வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக