சேத்தியாத்தோப்பு :
தமிழ்நாடு ஐக்கிய ஜனதாதள மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சேத் தியாத்தோப்பில் நடந்தது.
மாநில தலைமை பொது செயலாளர் ராஜகோபால் தலைமை தாங் கினார். மாவட்டத் தலைவர் சங்கர், பொதுச் செயலாளர் திருவரசமூர்த்தி முன் னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாநில தொழிற்சங்க தலைவர் நடேசபழனி, மாநில இளைஞரணி தலைவர் செங்கை ஆனந்தன், மாநில பொதுச் செயலாளர் எழிலோவியன், மாநில செயலாளர் இப்ராம்பால், ஊனமுற்றோர் பிரிவு தலைவர் காமராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏழுமலை உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து நஷ்டஈடு வழங்க வேண்டும். சமச்சீர் கல்வித்திட்டத்தை அமுல்படுத்துவதற்குமுன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்தை கேட்டு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறத் தக்க வகையில் அமல்படுத்த வேண்டும். மிஸ்ரா கமிட்டி அறிக் கையை ஏற்று தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதித்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக