உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி மந்தம்

பண்ருட்டி :

               பண்ருட்டி திருவதிகை வீரட் டானேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் இரு ஆண்டுகளாக மந்தமாக நடந்து வருகிறது.

                 பண்ருட்டி திருவதிகையில் முதல்பாடல்பெற்ற  அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருப் பணிகள் துவங்கியது.  திருப்பணி மதிப்பீடு 35 லட்சத்தில் அரசு நிதி 8.50 லட்சமும், உபயதாரர்கள் செலவில்  26.50 லட்சம் மூலம் பணிகள் செய்ய வேண்டும். இதில் ராஜகோபுரம், 2ம் நிலை ராஜகோபுரம் ஆகிய பணிகள் முடிவடைந்தது. கருவறை விமானம், சுற்றுசுவர் மண்டபம்  சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அர்த்த மண்டபம், மகா மண்டபம், அலங்கார மண்டபம், அம் பாள் கோவில், விநாயகர் , வள்ளி தெய் வானை சுப்ரமணிய சுவாமி கோவில், பரிகார கோவில், நூறுகால் மண்டபம், வாயில் முன் மண்டபம், குளம், சுற்றுச்சுவர், கோவில் வாயில் முன் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம்,தேர் பணி  ஆகிய பணிகள் துவங்க வேண்டியுள்ளது. பணிகள் குறித்து விழுப்புரம் இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை இணை ஆணையர் திருமகள் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீர் ஆய்வு செய்து மூன்று மாதத்தில் பணிகளை முடித்து தை மாதம் கும்பாபிஷேகம் செய்ய உத்திரவிட்டார்.

                    ஆனால் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக  திருப்பணிகள் முடிவடையாமல் கிடப்பில் உள்ளது.  கோவிலில் ஓதுவார், பரிச்சாரகர், சுயம்பாகர், விளக்கு போடுபவர், மேளக்காரர், பூதொடுப்பவர், எலக்ட்ரீஷியன், சலவை தொழிலாளி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் தற்போது பணிபுரியும் ஊழியர்கள் கூடுதல் பணிகளை செய்வதால் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.   கோவில் வருமானத்தை அதிகரிக்கவும், திருப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior