திட்டக்குடி :
திட்டக்குடி பஸ் நிலைய வளாகத்தில் பயணிகளை கவர்ந்திட நிறுத்தப்படும் தனியார் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது.
விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையின் மையத்தில் உள்ள திட்டக் குடியில் ஏராளமான அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இவ்வழியாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ் உள்ளிட்ட வாகனங் கள் சென்று வருகின்றன. திட்டக்குடி பஸ் நிலையத்திலிருந்து தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், மங்களூர், சிறுபாக்கம், தொழுதூர், நாவலூர், பெண்ணாடம் வழித் தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையம் எந்நேரமும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது.
மேலும் கடலூர்-திருச்சி மார்க்கமாக குறிப் பிட்ட பஸ் நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்தி செல் லும் 310 தடம் எண் அரசு பஸ்கள் மணிக்கு நான்கு முறை சென்று வருகின்றன. இவைகள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லாமல், பஸ் நிலையம் முன்பாக நிறுத்தி பயணிகளை இறக்கி செல் கின்றன. இதைப்போல விருத்தாசலம்- தொழுதூர் மார்க்கமாக செல்லும் தனியார் பஸ்களும் உட்புறம் வந்து செல்வதில்லை. இதனால் பஸ் நிலை யம் எதிரே தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டு வருகிறது. இதனை தடுத்திட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக