உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

ஊராட்சிகளில் நூலக அறிவுத்திறன் போட்டி

கடலூர் :

                 மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் நூலக அறிவுத் திறன் போட்டிகள் நடத்தப் பட்டன.

                    மாளிகைகோட்டத்தில் நடந்த விழாவிற்கு ஊராட்சி தலைவர் வசந்தா தலைமை தாங்கினார். நல்லூர் ஒன்றிய ஆணையர் சேகர், விரிவாக்க அலுவலர் பிரேமா, துணைத்தலைவர் வசந்தா முன்னிலை வகித்தனர். நூலகர் ராஜகோபால் வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற உதவி திட்ட அலுவலர் செல்வபெருமாள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். சுந்தரம் நன்றி கூறினார். நத்தப்பட்டு: ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர்கள் நடுவராக இருந்து போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றார். தச்சகாடு: ஊராட்சி தலைவர் கோபு தலைமை தாங்கினார். அறிவு திறன் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒன்றிய ஆணையர் சுலோச்சனா சான்றிதழ் வழங்கினார். விழாவில் இ.ஓ.பி., ராமதாஸ், கிராம நிர்வாக அலுவலர் அசோகன், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோ.ஆதனூர்:

                 ஊராட்சி தலைவர் ஜமுனாராணி தலைமை தாங்கினார். நூலகர் தேசிங்கு, உதவி மேற்பார்வையாளர் ஜெயராமன், தலைமை ஆசிரியர் பெரியசாமி முன் னிலை வகித்தனர். மாவட்ட உதவி திட்ட அலுவலர் உஷாராணி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பேசினார். ஆசிரியர் கவிதா, மலர் விழி, பிரேமகுமாரி, சுஜாதா, வார்டு உறுப்பினர்கள் தமிழ் செல்வன், கொளஞ்சிநாதன், அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 கடவாச்சேரி:

           வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். குமராட்சி ஒன்றிய சேர்மன் மாமல்லன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில் சத்துணவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 மேலத்திருக்கழிப்பாலை:

                  ஊராட்சி தலைவர் பொன்னுசாமி  தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கீதாராணி வரவேற்றார். கவுன்சிலர் திருஞானசம்மந்தம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ், தலைமை ஆசிரியர் செல்வி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கான தனித்திறன் போட் டிகளை  உதவி ஆசிரியை உஷா, வர்ணசுதன், திவ்யா உள்ளிட் டோர் நடத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  நூலகர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

 சு.கீணனூர்:

              ஊராட்சி தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மணி முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் உஷாராணி பரிசு வழங்கினார். கம்மாபுரம் பி.டி.ஓ., சிவன், ஜெயராமன், துணை தலைவர் இளவரசி, எழுத்தர் ரவிசந்திரன், நூலக அலுவலர் மாணிக்கம், சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 கொழை:

             ஊராட்சி தலைவர் ராமானுஜம் தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர்கள் கண்ணாயிரம், கண்ணன் முன்னிலை வகித்தனர். ஞானசேகரன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் அந்தோணிசாமி, பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியதாஸ், சகாயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior