பண்ருட்டி :
கண்டரக்கோட்டை பெண் ணையாற்றில் மணல் குவாரியால் ஏற்பட்டுள்ள மெகா பள்ளங் களால், உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்திட வேண்டும்.
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை, புலவனூர் பெண் ணையாற்றில் மணல் குவாரி இயங்கியது. விதிமுறைகளை மீறி 20 அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுக்கப்பட்டதால் ஆற்றில் பல இடங்களில் யானை பிடிக்கும் அளவிற்கு "மெகா' பள்ளங்கள் ஏற் பட்டது. ஆற்றில் தண்ணீர் வந் தால் சிறுவர்கள் பள்ளங்களில் சிக்கி இறக்கும் அபாயம் நிலவி வருகிறது. இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியானதை தொடர்ந்து கடந்த 10ம் தேதி கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் குவாரியை பார் வையிட்டு மெகா பள்ளங்களை மூடி சமன் செய்திட குவாரி குத்தகைதாரர்களுக்கு உத்தரவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து பெயரளவிற்கு அதிகாரிகள் பார்வையிட்ட பகுதியில் இருந்த பள்ளங்களை பொக்லைன் கொண்டு சமன் செய் தனர். பிற பள்ளங்களை அப்படியே விட்டுவிட்டனர். இதனால் கடந்த மாதம் பெய்த தொடர் மழையில் ஆற்றில் சிறிய அளவில் தண்ணீர் செல்கிறது. பள்ளங்கள் உள்ள பகுதியில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் சுற்று வட்டாரத்தில் உள்ள சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். மேலும் பொங்கல் பண்டிகைக்கு வெளியூர்களில் இருந்து பலர் ஆற்று திருவிழாவில் கலந்து கொள்வார்கள். ஆற்று நீரில் விளையாடும் போது குவாரியில் மணல் எடுத்த பள்ளங்கள் தெரியாமல் பலர் விபத்துக்களில் சிக்கிட வாய்ப்புள்ளது. அதனை தவிர்த்திட தற்போது ஆற்றில் தண்ணீர் தேங்கியுள்ள பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக