நடுவீரப்பட்டு :
பொங்கல் பண்டிகைக் காக மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங் கலுக்கு இன்னும் 10 நாட் களே உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு புதுப்பானையில் பொங்கலிட்டு குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால், இன்றைய விஞ்ஞான உலகில் நகர பகுதிகளில் சம்பிரதாய பண்டிகையாக மாறியுள்ளது. காஸ் அடுப்பில் சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்களில் பொங்கல் வைத்து வருகின்றனர். ஆனால் நாட்டின் முதுகெலும்பாக உள்ள கிராமங்களில் இன்றைக்கும் பாரம்பரியத்தையும், கலாசாரங்களை மறக்காமல் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கலை வெகு சிறப் பாக கொண்டாடி வருகின் றனர்.
அதில் முதல் நாள் வீட்டு வாசல் அல்லது தோட்டங்களில் புதிய அடுப்பில் பெரிய மண் பானைகள் வைத்து குடும் பத்தினருடன் கூடி பொங் கல் வைத்து இயற்கையை வழிபடுகின்றனர். மண் பானை, சட்டி மற்றும் அடுப்பு தேவை அதிகம் உள்ளதால் கிராமங்களில் மண் பானை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பானைகளின் அளவிற்கு ஏற்ப 20 முதல் 80 ரூபாய் வரை விலை இருக்கும் என தொழிலாளர்கள் கூறுகின்றனர். நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில் பொங்கல் பண்டிகையினால் தற்போது சூடுபிடித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக