பண்ருட்டி :
பண்ருட்டி பகுதியில் நவரை பருவத்திற்கு ஏற்ற நெல் விதைகள் ஆடுதுறை 37,45 பயிரிட அறிவுறுத்தப்பட் டுள்ளது.
இதுகுறித்து பண்ருட்டி உதவி வேளாண் இயக்குனர் ஹரிதாஸ் விடு த்துள்ள செய்திக்குறிப்பு:
நவரை பருவத்திற்கு ஏற்ற நெல் ரக விதைகள் ஆடுதுறை-37 மற்றும் ஆடுதுறை-45 பண்ருட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ரகங்கள் அதிக உற்பத்தி திறன் கொண்டவை. நவரையில் அதிக மகசூல் பெற்றிட மேலான நடவும், இளம் நாற்றுக்களை நடவு செய்வதும் மிக முக்கியம். மேலான நடவு செய்திட சேடை உழவினை ஏர் கலப்பை அல்லது பவர் டில்லர் கொண்டு செய்திட வேண்டும். நாற்று நட்ட 13 முதல் 18 நாட்களுக்குள் நாற்று பறித்து நடவு செய்திடல் வேண்டும். இந்த தொழில்நுட்பங்கள் செம்மை நெல் சாகுபடி முறையில் மிக முக்கியமான வயல் பணிகளாகும். நெல்விதைக்கு ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டத்தில் கிலோவிற்கு ஏழு ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு வேளாண் துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக