சிறுபாக்கம் :
சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரி அமைச்சரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.
மங்களூர் ஒன்றிய ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் டாக்டர் ராஜூ, சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
திட்டக்குடி வட்டத்தில் சிறுபாக்கம் குறுவட்ட தலைமையிடமாக இயங்கி வருகிறது. இதனை சுற்றி எஸ்.மேட்டூர், எஸ்.புதூர், அரசங்குடி, வி.புதூர், சித்தேரி, நரையூர் உட்பட சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினசரி நூற் றுக் கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். ஆனால் சில மணி நேரம் மட்டுமே டாக்டர் கள் சிகிச்சையளித்து செல்வதால், அவசர காலங்களில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, முழு நேர மருத்துவமனையாக தரம் உயர்த்தி டாக்டர், பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட் டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக