சிறுபாக்கம் :
வேப்பூர் அருகே மாயமான மாணவ, மாணவிகளை போலீசார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கவேல் மகன் சதீஷ் (15), கொண் டையன் மகள் தேவி (14), அய்யப்பன் மகள் ரம்யா (14), பழனி மகன் பிரபாகரன் (13), செல்வராஜ் மகள் மகேஸ்வரி (14). இவர்கள் கடந்த 28ம் தேதி பள்ளிக்கு சென்று, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், வேப்பூர் போலீசில் புகார் அளித்தனர். திட்டக்குடி டி.எஸ்.பி., இளங்கோ, இன்ஸ்பெக் டர் (பொறுப்பு) தமிழ்மாறன் தலைமையில் தனிப் படை அமைத்து மாயமான மாணவ, மாணவிகளை தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான மூன்று மாணவிகள் மட்டும் அய்யனார்பாளையம் மஞ்சமாதா கோவில் அருகே இருப்பதாக நேற்று காலை 8 மணிக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று மாணவிகள் தேவி, ரம்யா, மகேஸ் வரி ஆகியோரை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், சக மாணவர்கள் சதீஷ், பிரபாகரன் ஆகியோருடன் மாணவிகள் மூவரும் திருப்பதி சென்றுள்ளனர். அங்கு பிரபாகரன் மொட்டை போட்டுக் கொண்டார். வேலூர் வழியாக திருவண்ணாமலை வந்ததும் பணம் தீர்ந்தது. அதனால் மகேஸ்வரி அணிந்திருந்த அரை சவரன் தோடை அடகு வைத்து, 2,000 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு இரவு கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். அங்கு மாணவர்கள் இருவரும் தாங்கள் பெங்களூரில் ஏற்கனவே வேலை செய்த கடைக்கு செல்வதாக கூறி, மாணவிகள் மூவரிடமும் 30 ரூபாய் பணத்தை கொடுத்து வேப்பூருக்கு பஸ் ஏற்றி விட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு வேப்பூர் வந்த மாணவிகள் மூவரும் அய் யனார்பாளையம் மஞ்சமாதா கோவிலில் தங்கியது தெரியவந்தது. மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி, பெற் றோரிடம் ஒப்படைத்தனர். இந் நிலையில் கள்ளக்குறிச்சி பகுதிகளில் தேடிக் கொண்டிருந்த சப்- இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினர், நேற்று மதியம் 1.30 மணியளவில் சதீஷ், பிரபாகரன் ஆகிய இருவரையும் பிடித்து வேப்பூர் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக