கிள்ளை :
சிதம்பரம் அடுத்த கிள்ளையில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏக்தா நம்பிக்கை மையத்தின் சார்பில் தன்னம்பிக்கை முகாம் நடந்தது.
சிதம்பரம் அருகே சுனாமியால் பாதித்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் மதுரை ஏக்தா நம்பிக்கை மையம் பல்வேறு சேவைகள் செய்து வருகிறது. மேலும், வறுமை கோட் டிற் கும் கீழுள்ள மாணவிகளுக்கு இலவச விடுதி, கம்ப்யூட்டர் பயிற்சி, மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பொதுத்தேர்வை எதிர் கொள்ளும் விதம் குறித்த தன்னம் பிக்கை முகாம் கிள்ளை அரசு மேல் நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கலைமணி வரவேற்றார். முகாம் நோக்கம் குறித்து பரங்கிப்பேட்டை ஒன்றிய கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்து சுகுமார் பேசினார். மாணவர்கள் தேர்வை எதிர்கொள் ளும் விதம் குறித்து மதுரை சமூகவியல் கல்லூரி பேராசிரியர் கண்ணன் ஆலோசனை வழங்கினார். கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கபிலர் தமிழ்ப்பாடம், புதுச்சேரி வீராம்பட் டினம் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தேவராஜ், வீரப்பன் முறையே சமூக அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலப்பாடம், பண்டசோழ நல்லூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதிராஜன் அறிவியல் பாடம் குறித்து ஆலோசனை வழங்கினர். காலை 10 மணியிலிருந்து மாலை 5மணி வரை நடந்த நிகழ்ச்சியில் கிள்ளை, சி.முட்லூர் மற்றும் கொடிப்பள்ளம் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக