கடலூர் :
மின் வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் பி.எஸ். என்.எல்., நெட் பி.சி.,புதிய திட்டத் தினை கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன் கடலூர் மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களின் செயல் பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது மின் வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் பி.எஸ்.என்.எல்., நெட் பி.சி., என்ற புதிய திட்டத்தினை துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாடு அலுவலர்களின் அலுவலகங்களோடு கணினி மூலமாக இணைக்கப்படுவதுடன், சங்க உறுப்பினர்களின் கடன் பிடித்த விபரங்கள் உறுப்பினர்களின் மொபைல் போன்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இத்திட்டம் அனைத்து சங்கங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது என மண்டல இணைப்பதிவாளர் வெங்கடேசன் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் மிருணாளினி, துணைப் பதிவாளர்கள் சுப்ரமணியம், மகபூப் ஷெரீப், சூர்யபிரகாஷ், இளஞ்செல்வி உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக