ராமநத்தம் :
தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக் குனர் ராஜபிரதாபன், கல் லூரி இயக்குனர் மேஜர் குஞ்சிதபாதம் முன்னிலை வகித்தனர். முதல்வர் பழனிசாமி வரவேற்றார். என்.எல்.சி., இயக்குனர்(பவர்) சேதுராமன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார். இதில் திருச்சி அங் காளம்மன், துறையூர் ஜெயராம், சென்னை வேல் டெக், கோவை பி.எஸ்.ஜீ., மன்னார்குடி ஏ.ஆர்.ஜே. பொறியியல் கல்லூரி உள்பட தமிழகத்தின் பல் வேறு பகுதிகளை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து விளக்கினர். இதில் திருச்சி அண்ணா பல்கலைக் கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் துறை தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு கட்டுரை சமர்ப் பித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றுகளை வழங்கி கவுரவித்தார். கருத்தரங்கில் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி துறை தலைவர்கள் பாலாஜி, மணிகண்டன், சுரேஷ், தனமதி, கண்ணன் உள்பட பல் வேறு கல்லூரிகளை சேர்ந்த துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். செல் வராஜ் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக