தியாகதுருகம் :
தியாகதுருகம் அருகே சர்ச்சைக் குரிய இடத்திற்கு டாஸ்மாக் கடை இடமாற் றம் செய்யப்பட்டுள்ளது.
தியாகதுருகம் அடுத்த கொட்டையூரில் உள்ள டாஸ்மாக் கடை கடந்த மாதம் திடீரென புதிய இடத்திற்கு மாற்றப்பட் டது. அக்கட்டடம், அரசு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட தொகுப்பு வீடு என்பதால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையறிந்த தியாகதுருகம் பி.டி.ஓ., அன்பழகன், கடையை அகற்றும்படி டாஸ்மாக் மண்டல மேலாளருக்கு கடிதம் அனுப்பினார். அதையடுத்து தொகுப்பு வீட்டையொட்டி முறைகேடாக புதிய கட்டடம் கட்டி, அனுமதியின்றி கடையை மாற்றி உள்ளனர். அரசு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கட்டடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருவது சர்ச் சையை கிளப்பி உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக