காட்டுமன்னார்கோவில் :
சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்புவதற்காக, வீராணம் ஏரியில் முழு அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி மூலம் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. ஏரியின் மொத்த உயரம் 47.5 அடி. கடந்த ஒரு வாரமாக, வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக 2,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரியின் பாசன மதகுகள் அனைத்தையும் அடைத்து, படிப்படியாக தண்ணீர் அளவை அதிகாரிகள் அதிகப்படுத்தி வருகின்றனர். நேற்று மாலை நிலவரப்படி வீராணம் ஏரியின் முழு கொள்ளளவான 1,465 மில்லியன் க. அடி (47.5 அடியை) எட்டியுள்ளதால், தற்போது வீராணம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால், இந்த கோடையை சமாளிக்க முடியும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் கருதுகின்றனர். தற்போது சென்னை நகரின் குடிநீருக்காக நாளொன்றுக்கு 76 கன அடியும், வி.என்.எஸ். மதகு வழியாக பாசனத்திற்காக 200 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக