உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

திட்டக்குடி சுகாசன பெருமாள் தேரில் வீதியுலா

திட்டக்குடி : 

               திட்டக்குடி சுகாசன பெருமாள் தைப்பூச பிரம் மோற்சவத்தை முன்னிட்டு தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 
                    திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவிலில் தைப்பூச பிரம்மோற்சவ விழா 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு திருமஞ்சனம், யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. ஒன்பதாம் நாள் உற்சவமான திருத்தேர் விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. உற்சவர் பெருமாள், தாயார் சுவாமிகள் தேரடியில் அலங்கரித்த திருத்தேரில் அமர்த்தி கும் பகோணம் சக்கரவர்த்தி, திட்டக்குடி ஸ்ரீதர் பட்டாட் சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். காலை 10.30 மணிக்கு சமேத கோலத்தில் சுகாசன பெருமாள் வீற்றிருந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக இழுத்து வந்தனர். விழாவில் தொழிலதிபர்கள் ராஜன், வேணுகோபால், பன்னீர்செல்வம், பேரூராட்சி தலைவர் மன்னன்,  தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு, காங்., நகர தலைவர் கனகசபை, அரிமா சிவக்குமார், கிருஷ்ணன், தங்கராசு, மாரிமுத்து, ராஜகுரு உள் ளிட்ட ஏராளமான பக்தர் கள் பலர் கலந்து கொண்டனர். மாலை தீர்த்தவாரி உற்சவமும், சுகாசன பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து வேத விற்பன்னர்கள் கும்பகோணம் சக்கரவர்த்தி, ஸ்ரீதர் பட்டாட்சாரியார்கள் சுகாசன பெருமாளுக்கு புஷ் பாஞ்சலி செலுத்தி 12 வகையான பூஜைகள் செய் தனர். யாகசாலை பூஜைகளும் பத்து நாள் உற்சவத்தின் நிறைவாக மகா பூர்ணாஹதி, சப்தாவர்ணமும் பகல் 12.30 மணிக்கு கொடியிறக்கப்பட்டது. யாகசாலையில் பூஜைகள் செய்த 9 புனித நீரால் மூலவர் சுகாசன பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior