உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

வட மாநில வியாபாரிகளால் பருப்பு விலை 'கிடுகிடு' உயர்வு

 பண்ருட்டி: 

                       வட மாநில வியாபாரிகள் கொள்முதல் அதிகரிப்பால் துவரம் பருப்பு, உளுந்து, கடலை, பாசி பயறு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. துவரம் பருப்பு, பாசி பருப்பு, உளுந்து உற்பத்தி குறைவால் கடந்த ஆண்டு 40 ரூபாயில் இருந்த பருப்பு விலை 'ஜெட்' வேகத்தில் இரு மடங்காகவும், துவரம் பருப்பு 100 ஆகவும் உயர்ந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் குஜராத், கர்நாடகா குல்பர்கா, மகாராஷ்டிரா மாநில துவரம் பருப்பு, பாசி பயறு, உளுந்து வரத்து துவங்கியதால் பருப்பு விலை சற்று குறைய துவங்கியது. அதனால் துவரம் பருப்பு முதல் ரகம் 60 ரூபாயும், பாசி பயறு 75ம், உளுந்து 54 என விலை குறைந்தது. ஆனால் தற்போது வடமாநிலங்களில் தேவை அதிகரிப்பால் துவரம் பருப்பு, பாசி பயறு, உளுந்து விலை தற்போது மீண்டும் 'கிடுகிடு'வென உயர துவங்கியுள்ளது. பண்ருட்டி மார்க்கெட்டில் துவரம் பருப்பு முதல் ரகம் ஒரு கிலோ 72 ரூபாயும், பைத்தம் பருப்பு 85ம், உளுந்து 60ம், குண்டு உளுந்து 72 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. கடலை பயறு 30ல் இருந்து 32ம், மல்லி 40ல் இருந்து 45ம் உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் வாட் வரி பிரச்னைக்காக மார்க்கெட் அடைக்கப் பட்டுள்ளதால் 52 ரூபாயாக இருந்த வற்றல் மிளகாய் 60 ரூபாயாக உயர்ந்துள்ளது.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior