உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

பயணிகளின் தாகம் தணிக்குமா பண்ருட்டி நகராட்சி

 பண்ருட்டி:

              பண்ருட்டி பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து பயணிகளின் தாகத்தை தீர்க்க குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என பொது நல அமைப்புகள் பண்ருட்டி நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளன. பண்ருட்டியைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமத்தினர் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளவும், வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் வியாபார ரீதியாகவும் பண்ருட்டிக்கு வருகின்றனர். இதனால்  பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களும் பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பண்ருட்டி பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் நான்கு இடங்களில் பிளாஸ்டிக் தொட்டிகளை அமைத்த நகர நிர்வாகம் அவற்றை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டது. இதனால் பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் கடைகளில் தண்ணீர் பாக்கெட் வாங்கி குடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் பஸ் நிலையத்தில் ஒரு தண்ணீர் பாக்கெட் ரூ.1.50 முதல் ரு.2 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பண்ருட்டி பஸ் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாக்கெட்டுகளில் முகவரி, உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் அச்சிடப்படாமல் விற்பனை செய்யப்படுவதாகவும், சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயணிகளின் நலன் கருதி பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியை விரைந்து ஏற்படுத்தித் தரவேண்டும் என பொது நல அமைப்புகள் நகர நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளன.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior