உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

பெண்ணாடம் மேம்பால பணிக்காக மாற்றப்படும் ஒருவழிப்பாதை சாலைகள் சீரமைக்க கோரிக்கை

 திட்டக்குடி: 

                      பெண்ணாடம் மேம்பாலம் பணிக்காக ஒருவழிப்பாதை மாற்றம் செய்வதற்கு முன்னதாக கிராமப் புற சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம், திட்டக்குடி வழியாக ஆயிரத்திற் கும் மேற்பட்ட வாகனங்கள், பஸ்கள், பள்ளி வேன் கள் உட்பட சிமென்ட் மற் றும் சர்க்கரை ஆலைக்கு தேவையான மூலப் பொருட்கள், உற்பத்தி பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங் கள் செல்கின்றன. பழுதடைந்த நெடுஞ்சாலையை சீரமைத்து அகலப்படுத்த 19.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இறையூர் ரயில்வே மேம்பாலம் அமைக்க 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கியுள்ளது. மேம்பால பணிகள் மற்றும் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக நெடுஞ் சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை செய்து வருகின்றனர். இந்நிலையில் மேம்பால பணிக்காக ஒரு மாதத்திற்குள் போக்குவரத்து மாற் றம் செய்து ஒருவழிப்பாதையாக மாற்றி, வாகன நெரிசல் கட்டுப்படுத்தப் பட உள்ளது. இதனால் ஆயிரத்திற் கும் மேற்பட்ட வாகனங் கள் கிராமப்புற சாலை வழியாக தொடர்ந்து செல்லும். இதனால் கரும்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தார் சாலைகள் மேலும் பழுதடைய வாய்ப்புள்ளது. மேம்பால பணிகள் நிறைவடையும் முன்னதாகவே கிராமப்புற சாலைகள் பெயர்ந்து முற்றிலும் போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலைக்கு மாறிவிடும். எனவே தற்போது பழுதான கிராமப்புற சாலைகளை போக்குவரத்து மாற்றம் செய்வற்கு முன்னதாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior