உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

கடலூரில் தயாரான 'பார்ஜ்' இன்று எண்ணூர் செல்கிறது

 கடலூர்: 

                       கடலூர் துறைமுகத்தில் கடந்த ஒன் றரை ஆண்டாக தயாரிக்கப்பட்ட 'டெர் லோடர் பார்ஜ்' எண்ணூர் துறைமுகத் திற்கு இன்று அனுப்பப்படுகிறது. கடலூர் துறைமுகம் சுனாமி தாக்குதலுக்கு பின், மணல் மேடாகி மீன்பிடி விசைப்படகுகள் தொழிலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் தவித்து வந்தனர். இதை தொடர்ந்து, தமிழ்நாடு கடல் சார் வாரியத்தின் சார்பில் துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டது. பின்னர் அரசு சார்பில் துறை முக மேம்பாட்டுப் பணிகள் நடந்தன. கடலூர் துறைமுகத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பின், வெளிநாட்டிலிருந்து உரங் கள் இறக்குமதி செய்யப்பட்டு ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்பட்டது. கடலில் பல நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் நிறுத்தப்படும் கப்பல்களிலிருந்து துறைமுகத்திற்கு சரக்குகளை கரைக்கு எடுத்து வர, 'பார்ஜ்'கள் தயார் செய்யும் பணி துவங் கியது. ஏற்கனவே கடலூரில் தயாரிக்கப்பட்ட 'பார்ஜ்' துபாய்க்கு அனுப்பப்பட்டது. மேலும், கடலூர் துறைமுகம் பகுதியில் குறைந்த டன் எடை கொண்ட சரக்கு கப்பல்களும் தயார் செய்யப்பட்டு, சிங்கப் பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு அனுப் பப்படுகின்றன. 900 டன் எடை தாங்கும் வகையில் 250 டன் கொண்ட 'டெர்லோடர் பார்ஜ்' கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த 'பார்ஜ்' இன்று எண்ணூர் துறைமுகத்திற்கு அனுப் பப்படுகிறது.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior