பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் உழவு ஓட்டவும், நடவு செய்யவும் மினி டிராக்டர் வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் விவசாயிகள் உழவு ஓட்டவும், நாற்று நடவும் கூலி ஆட்கள் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இதனால் உரிய பருவத்தில் பயிர் செய்ய முடியாமல் காலம் கடந்து செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. இக்குறையை போக்க விவசாய சேவை மையம் மூலம் பு.முட்லூர், ஆயிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, தொழுதூர், பெண்ணாடம் உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தலா 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மினி டிராக்டர், கை டிராக்டர் (பவர் டில்லர்), நடவு இயந்திரம், ஸ்பிரேயர், பவர் ஸ்பிரேயர், தார்பாய் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தனி அலுவலர் கோபிநாத், செயலாளர் பார்த்தீபன், உதவி செயலாளர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
downlaod this page as pdf