உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

கடலோர பாதுகாப்பிற்காக இரண்டு கப்பல்

 கடலூர்,: 

                கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கிழக்கு பிராந்திய கடலோர காவல் படையின் இரண்டு கப்பல்கள் இன்னும் ஓராண்டில் கடலூர் துறைமுகத்தில் நிரந்தரமாக நிறுத்தப்படும் என, கிழக்கு பிராந்திய ஐ.ஜி., ராஜசேகர் தெரிவித்தார்.

                      மும்பையில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம், கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்பை பலப் படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரியில் கோஸ்டல் கார்டு, தமிழக கடலோர பாதுகாப்புப் படை போலீசாரை கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை ஐ.ஜி., ராஜசேகர் நேற்று காரைக்கால் துறைமுகத்தை ஆய்வு செய்த பின், கடலூர் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடலூர் துறைமுக அதிகாரிகள், 'துறைமுகம் ஆறு மீட்டர் ஆழமும், 60 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. சிறிய அளவிலான மீன்பிடி கப்பல்கள் மட்டுமே வந்து செல்கின்றன' என, தெரிவித்தனர். ஐ.ஜி., ராஜசேகர் கூறியதாவது: கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டிற்குள் கடலூர் துறைமுகத்தில் கிழக்கு பிராந்திய கடலோர காவல் படையின் இரண்டு கப்பல்களை நிரந்தரமாக நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கப்பல் வந்து செல்வதற்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து முதல்வர், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஆகியவற்றுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ராஜசேகர் தெரிவித்தார்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior