திட்டக்குடி:
பெண்ணாடம் அருகே பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள தாய், சேய் நல விடுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாடம் அடுத்த கொத் தட்டை ஊராட்சியில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்ட தாய்சேய் நல விடுதி இன்னும் திறப்பு விழா காணப்படாமலேயே புதர்கள் மண் டிப்போய் பாழடைந்து வருகிறது. இதனால் கொத்தட்டை, எரப்பாவூர், அருகேரி, கீழ்நெம்மேலி, மேல்நெம் மேலி, மருவத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த உடல் நிலை சரியில்லாதவர்களும், பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணி பெண்களும் பஸ் வசதி இல்லாத நிலையிலும் பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இப்பகுதி பிரசவ காலங்களில் கர்ப்பிணி பெண்கள் படும் பாடு திண்டாட்டம்தான். சுகப்பிரசவமாக இருந்தால் பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அறுவை சிகிச்சை என்றால் திட்டக்குடிக்கும் வரவேண்டிய சூழல் உள்ளது. இதுபோன்ற நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது.
கர்ப்ப காலங்களில் தாய், சேய் இறப்பு குறைந்துள்ளதாக அரசு அறிவித்து வரும் நிலையில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாமல் பாழடைந்து வரும் தாய், சேய் நல விடுதி சீரமைக்காத நிலை சுகாதாரத்துறையின் அலட்சியத்தை காட்டுகிறது. சுகாதாரத் துறையில் மாவட்ட அமைச்சராக இருந்தும் அவரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். கொத்தட்டை ஊராட்சியை சுற்றியுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உடனடி மருத்துவ வசதி கிடைக்காமல் தவித்து வரும் நிலையை போக்க உடனடியாக நடவடிக்கை மேற் கொண்டு பாழாகி வரும் தாய், சேய் நல விடுதியை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
downlaod this page as pdf