கடலூர்:
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியல் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வறுமையில் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடும் பொருட்டு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் வாழ்க்கையின் அடித் தட்டில் உள்ளவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கடந்த 2002ம் ஆண்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள் ளோர் பட்டியலை தயாரித்தது. ஒரு குடும்பத்தின் வாழ் நிலையை கண்டறிய நிலம், வீட்டின் தன்மை, உடுக்கும் உடை, உணவு முறை, கழிவறை, வீட்டில் உள்ள ('டிவி', மின்விசிறி, சமையல் சாதனம், ரேடி யோ, குக்கர்) பொருட்கள், குடும்ப உறுப்பினர்களின் கல்வித் தகுதி, குடும்ப உழைப்பு நிலை, வருமானத்தின் தன்மை, குழந்தைகளின் நிலை, கடன் தன்மை, இடம் பெயர்ந்ததற்கான காரணம், அரசு உதவி தேவைப்படும் தன்மை என 13 இனங்களில் ஒவ்வொரு கேள் விக்கும் ஐந்து பிரிவுகளில் தகவலை சேகரித்து படிவத்தை பூர்த்தி செய்து மதிப்பெண் வழங்க மத் திய அரசு அறிவுறுத்தியது.
ஒவ்வொரு பிரிவிற்கும் ஜீரோ முதல் நான்கு மதிப்பெண் என மொத்தம் 13 கேள்விகளுக்கும் 52 மதிப்பெண் வழங்கப்படும். அதில் 17 மதிப் பெண்ணுக்கு குறைவாக உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு (பி.பி.எல்.,) கீழ் உள்ளவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன்படி கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக் கெடுப்பில் மொத்தம் மூன்று லட்சத்து 7ஆயிரத்து 685 குடும்பங்கள் வறுமைக் கோட்டில் உள்ளதாகவும், அதில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 583 குடும் பங்கள் (17 மதிப்பெண் ணுக்கு குறைவாக) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டியலின் அடிப் படையிலேயே அரசின் நலத்திட்டங்களுக்கு முன் னுரிமை அளிக்கப்படுகிறது.
குறிப்பாக மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை, ஆதரவற்ற விவசாய தொழிலாளர், கணவனால் கைவிடப்பட்ட அல் லது ஆதரவற்ற பெண்கள், 50 வயதை கடந்த திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் பயனாளிகள் வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடலூர் மாவட்டத்தில் இந்த கணக் கெடுப்பு பணி முறையாக வீடு, வீடாக சென்று நடத்தாமல், ஊழியர்களாகவே தயார் செய்துள்ளனர். இதனால் வசதி படைத்தவர்கள் பலர் வறுமைக் கோட்டிற்கு (17 மதிப் பெண்ணிற்கு ) கீழ் உள்ளவர்களாகவும், உண்மையில் சொந்த வீடின்றி சாலையோரத்தில் வசிப்பவர்கள் வறுமைக் கோட் டிற்கு மேல் உள்ளவர் களாக குறிப்பிடப்பட் டுள்ளனர்.
பட்டியலில் உள்ள குளறுபடியால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஓய்வூதியம் மற்றும் இந் திரா நினைவு குடியிருப்பு திட்டங்களில் பயன்பெற முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்த தவறால் ஏழை மக்களுக்காக இரு அரசுகளும் செயல்படுத்தி வரும் திட் டங்கள் பெருமளவு செல் வந்தர்களையே சென்றடையும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலை மறு ஆய்வு செய்து, தகுதி உள்ளவர்களை மட்டுமே அந்த பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும்.
downlaod this page as pdf