கடலூர்:
கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் இன்று திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து அனைத்து குடியிருப்போர் நலச் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன் விடுத்துள்ள அறிக்கை:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட் டில் பெருகி வரும் போக் குவரத்து நெரிசலை தவிர்க்க ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் பல போராட்டங்கள் நடத்தின. தமிழக அரசு அனுமதி அளித்ததும், ரயில்வே சுரங்கப் பாதை பணியை ரயில்வே நிர்வாகம் துவங்கும் என தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அறிவித்தார். இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலை துறை ரயில்வே சுரங்கப்பாதை பணிக்கான திட்டத்திற்கு அனுமதி அளித்தும், நிதி ஒதுக்கீடு செய்து ரயில்வே நிர்வாகத்திற்கு கடந்த டிசம்பர் 8ம் தேதி கடிதம் அனுப்பியும் பணியை துவங்காமல் ரயில்வே நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. விழுப்புரம் - மயிலாடுதுறை அகல பாதையில் வரும் 15ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப் படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், விருத்தாசலம் மார்க்கத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அவ்வழியே இயக்கப்படும் சரக்கு ரயில்களை கடலூர் வழியாக இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, கோடை விடுமுறை காலத்திலேயே ரயில்வே சுரங்கப்பாதை பணியை துவக்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி அனைத்து குடியிருப்போர் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகளும் இணைந்து இன்று (6ம் தேதி) திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
downlaod this page as pdf