பண்ருட்டி:
முந்திரி உற்பத்தி குறைவு காரணமாக, அதன் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. பண்ருட்டி பகுதியில் கடந்த ஆண்டு முந்திரி மரங்களில் பூக்கள் வைத்த நேரத்தில் பருவம் மாறி மழை பெய்ததால் உற்பத்தி 50 சதவீதம் குறைந்தது. இதனால் பலர் முந்திரி மரங்களை வெட்டி புதிய தோட்ட பயிர்களை பயிரிட துவங்கினர். தற்போது கேரளா, ஆந்திராவில் முந்திரி கொட்டை அறுவடை நடக்கிறது.
அங்கும் உற்பத்தி குறைந் துள்ளதால் வியாபாரிகளும், ஏற்றுமதியாளர்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் முந்திரிகளை நம்பி உள்ளனர். இதனால் 80 கிலோ எடை கொண்ட முந்திரி கொட்டை 4,000லிருந்து 4,500 ரூபாயாகவும், இறக்குமதி முந்திரி கொட்டை 3,000லிருந்து 3,500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக முந்திரி அனைத்து ரகங்களும் கிலோ ஒன்றுக்கு சராசரியாக 10 முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
downlaod this page as pdf