கடலூர்:
கடலூர் முதுநகர் மார்க்கெட் கமிட்டியில் நேற்று வேர்க்கடலைக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடலூர் முதுநகர் மார்க்கெட் கமிட்டியில் கடலூர், திருவந்திபுரம், நாணமேடு, உச்சிமேடு, தியாகவல்லி, காரைக்காடு, கண்டக்காடு, சில்லாங்குப்பம், சான்றோர் பாளையம், பில்லாலி தொட்டி உட்பட கடலூர் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் விவசாய பொருட்களை கொண்டு வந்து விற் பனை செய்கின்றனர். தற்போது கடலூர் பகுதியில் வேர்க்கடலை சீசன் என்பதால் மார்க் கெட் கமிட்டிக்கு வேர்க் கடலை அதிகளவில் வரத் துவங்கியுள்ளது. 12க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை வேர்க் கடலை மூட்டைகளுடன் விற்பனைக்கு வந்தனர். 91 லாட்டுகள் 400 மூட்டை வேர்க்கடலை விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்தது. வேர்க்கட லையை வாங்க விருதுநகர், பண்ருட்டி, விழுப்புரம், புவனகிரி, பரங்கிப் பேட்டை, திருக்கோவிலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வியாபார பிரதிநிதிகள் 12 பேர் வேர்க்கடலை மூட்டைகளை ஆய்வு செய்து விலை நிர்ணயம் செய்தனர். இதில் குறைந்தபட்சமாக 3,000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 3,229 ரூபாய் வரை விலை போனது. இந்த ஆண்டில் நேற்று மட்டும் அதிகபட்சமாக 400 மூட்டைகள் வேர்க் கடலை வரத்து இருந்தது குறிப்பிடத்தக்கதது.
downlaod this page as pdf