கடலூர்: 
            குடிநீர் வசதி கோரி டி.புதூர் கிராம மக்கள் காலி குடத்துடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 
                  கடலூர் அடுத்த டி.புதூர் கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறு நான்கு மாதங்களுக்கு முன் பழுதடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் 5 கி.மீ., தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது கோடை காலம் துவங்கி விட்டதால் குடிநீரின்றி அவதிப்பட்டு வரும் டி.புதூரை சேர்ந்த 50 பெண்கள் நேற்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். குறை தீர்வு கூட்டத்தில் இருந்த கலெக்டரை சந்தித்து தங்கள் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்க கோரி மனு கொடுத்தனர். மனுவை பரிசீலித்த கலெக்டர் சீத்தாராமன், டி.புதூர் கிராமத்திற்கு உடனடியாக புதிதாக ஆழ் துளை கிணறு அமைக்கவும், அதுவரை லாரி மூலம் தினமும் குடிநீர் வழங்க ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். 
downlaod this page as pdf
