உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

திட்டக்குடி பேரூராட்சியில் உதவி இயக்குனர் ஆய்வு: கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் கூறியதால் பரபரப்பு

திட்டக்குடி:

                         திட்டக்குடி பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி இயக்குனர் கூறினார்.கடலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சடையப்பன் நேற்று காலை திட்டக்குடி பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கவுன்சிலர்களிடம் கலந் தாய்வு நடத்தினார். அப்போது நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க வேண்டும். நகரில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்க அலுவலக ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் புகார் கூறினர்.

                     பின்னர் கடைவீதி, பஸ் நிலையம், காய்கறி மார்கெட், புதிதாக பேரூராட்சி அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், திட்டக்குடி பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் உடனடியாக நியமிக்கப்படுவார். அதிகளவு குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருப்பதால் 10 நாட்களுக்கு ஒருமுறை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். கவுன்சிலர்களின் கோரிக் கைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தீர்வு செய்யப்படும். அலுவலக ஊழியர்கள் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக் கப்படும். ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றிட வருவாய்த்துறை, செயல் அலுவலரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.அப்போது பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் முருகேசன், செயல் அலுவலர் (பொறுப்பு) பன் னீர்செல்வம், பொறியாளர் அன்புக் குமார் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior