உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

அண்ணாமலை பல்கலை., பட்டமளிப்பு விழா : கவர்னர் பங்கேற்பு

சிதம்பரம் :

         சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக 77வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பல்வேறு துறையில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களும், முதலிடம் பிடித்தவர்களுக்கு பதக்கங் களும் வழங்கினார். ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 527 பேர் பட்டம் பெற்றனர்.

                கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக 77வது பட்டமளிப்பு விழா சாஸ் திரி ஹாலில் நேற்று நடந்தது. தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந் தருமான சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.துணைவேந்தர் ராமநாதன் ஆண்டறிக்கை வாசித் தார். பல்வேறு துறைகளில் பி.எச்.டி., பட்டம் 201 பேருக்கும், எம்.பில்., பட்டம் 62 பேருக்கும், டி.எஸ்.சி., பட்டம் ஒருவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 22 பேருக்கு பதக்கங்களும், 123 மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசுகளை கவர்னர் வழங்கினார்.2008-09ம் கல்வியாண் டில் நேரடியாக படித்த 6,114 மாணவர்கள், தொலை தூரக்கல்வி மூலம் படித்த 97,413 பேர், ஆய்வு பட்டம் 264 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 527 பேருக்கு வழங்கப் பட்டது.

                விழாவில் டில்லி பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் வேத்பிரகாஷ் சிறப்புரையாற்றினார். இணைவேந்தர் எம்.ஏ.எம்., ராமசாமி, கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ், பதிவாளர் ரத்தினசபாபதி, தேர்வுத்துறை அதிகாரி மீனாட்சிசுந்தரம், தொலைதூர கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலசுப்ரமணியன், மற்றும் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினர் வேத் பிரகாஷ் பெயரில் 50 ஆயிரம் நிதியில் அறக் கட்டளையை எம்.ஏ.எம்., ராமசாமி துவக்கி வைத் தார்.விழா முடிந்ததும் கவர் னர் சுர்ஜித்சிங் பர்னாலா பல்கலைக் கழக விவசாய கல்லூரி ஹெலிபேடு தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior