கடலூர்:
கடலூர் அருகே கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுக்க பொது மக்கள் முன் வராததால் ஏலம் மறு தேதி அறிவிப் பின்றி ஒத்திவைக்கப்பட்டது.கடலூர் அடுத்த திருச்சோபுரநாதர் சிவன் கோவிலுக்கு 177.83 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஏற்கனவே ஏலம் எடுத்து பயன்படுத்தி வந்த 21 பேரின் 40 ஏக்கர் நிலம் மட்டும் நேற்று (22ம் தேதி) ஏலம் விடுவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்திருந்தது.இதனையடுத்து நேற்று காலை இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் ஜகநாதன், நிர்வாக அலுவலர் மேனகா, தக்கார் நாகராஜன், இந்து அறநிலையத்துறை அலுவலர் காண்டீபன் மற்றும் அதிகாரிகள் கோவில் நிலத்தை குத்தகை விடுவதற்காக திருச்சோபுரம் வந்திருந்தனர்.
புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இந்நிலையில் குத்தகைக்கு அறிவிக் கப்பட்ட கோவில் நிலங்களின் சர்வே எண்கள் தவறாக உள்ளது. மேலும் குத்தகைக்கு அறிவிக்கப்பட்ட இடங்களை அளந்து கொடுத்த பின்னரே ஏலம் விடவேண்டும் எனக் கூறி ஊர் பொது மக்கள் யாரும் நிலத்தை ஏலம் கேட்க முன்வரவில்லை.மேலும் கோவில் நீண்ட நாட்களாக கும்பாபிஷேகம் செய்யப்படாமல் உள்ளது. கோவில் நிலம் ஏலம் விடுப்படும் பணம் கோவிலின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து ஏலம் மறு தேதி குறிப் பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக