உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வரிடம் வலியுறுத்துவேன்: செல்வப்பெருந்தகை

திட்டக்குடி:

                திட்டக்குடியில் மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத் துவேன் என செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கூறினார்.திட்டக்குடி தொகுதியில் மழை பாதிப்புகள் மற்றும் வெலிங்டன் ஏரி சீரமைப்பு பணியை எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை நேற்று முன்தினம் பார்வையிட்டு விவசாய சங்க நிர்வாகிகளை சந்தித்து கலைந்துரையாடினார்.

 பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

                    வெலிங்டன் ஏரி சீரமைப்பு பணியில் 636 மீட் டருக்கு சிமென்ட் தளம் அமைக்கும் பணி முடிந் துள்ளது. மீதமுள்ள 200 மீட்டர் பணியை விரைந்து முடிக்க உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த முறை பார்வையிட்டபோது, பணிகள் திருப்தியாக இல்லையென முதல்வரிடம் முறையிட்டதை தொடர்ந்து, தற்போது வெலிங்டன் ஏரி கரை சீரமைப்பு பணிக் கென தனிக்குழு அமைத்து திட்டக்குடியில் தனியாக அலுவலகம் இயங்கி வருகின்றது. ஏரியின் உட்புறம் கட்டியுள்ள தடுப்பணை பலனின்றி உள்ளது. இதனை பார்க்கும் போது 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு முழுமையாக பயன்படுத்தப்படுமா என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் குழுவினர், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வாரம் ஒருமுறை கலந்தாலோசிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை செயலாளரிடம் வலியுறுத்தி உள்ளேன்.

              தொடர் மழையால் ஏரி கரை சீரமைப்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முறைகேடின்றி வெற்றிகரமாக முடித்தால் தமிழக அரசின் மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்படும்.வெலிங்டன் பாசன வாய்க்கால்களில் காட்டாமணக்கு செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளதால் தண்ணீர் கடைமடை வரை செல்லாமல் வயல்களிலும், சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலைகள் பழுதாகியும், பாலங் கள் உடைந்துள்ளன. முருகன்குடி தரைப்பாலம் மேம்பாலமாக விரைவில் தரம் உயர்த்தப்படும். தொகுதியில் கிராம மற்றும் நெடுஞ்சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

                  இதனை நெடுஞ் சாலை, பொதுப்பணி மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தனி குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.தொடர் மழையால் பாதித்த பருத்தி, கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கிட முதல்வரிடம் நேரில் முறையிட உள் ளேன் என்றார்.பேட்டியின் போது பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கதிர்வாணன், மாவட்ட பொதுச் செயலாளர் காமராஜ், பாசன சங்க தலைவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior