உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

கிராம பொதுசேவை மையத்தினர் உண்ணாவிரதம்

கடலூர்: 

                     கிராமப் பொது சேவை மையத்தைச் சேர்ந்த முகவர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 2 ஆண்டுகளுக்கு முன் கிராம பொது சேவை மையம் என்ற அமைப்பை தமிழகம் முழுவதும் உருவாக்கி இருக்கிறது. 

                    தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் பேரை இந்த நிறுவனம் தனது முகவர்களாக நியமித்து இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 300 பேர் முகவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ. 1.25 லட்சம் டெபாசிட் தொகையாக வசூலிக்கப்பட்டு உள்ளது. முகவர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்ய தலா ரூ. 60 ஆயிரம் வரை செலவிட்டு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். 

                     இந்த பொது சேவை மையங்களில் பொதுமக்களுக்கு மின் கட்டணம், இன்சூரன்ஸ் பணம் செலுத்துதல், ரேஷன் கார்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல், பட்டா மாற்றம் செய்ய உதவுதல், பிறப்பு இறப்புச் சான்றுகளை பெற்றுத் தருதல் உள்ளிட்ட சேவைகளை செய்து கொடுக்கவும், அதற்கான சேவைக் கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டதாம்.

                 இதற்காக மும்பையைச் சேர்ந்த அந்த நிறுவனம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாகவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் இப்பணி இதுவரை நடைபெற வில்லை என்றும் தாங்கள் செலுத்திய பணம் என்னவாயிற்று என்று தெரியவில்லை என்றும் கிராம பொது சேவை மைய முகவர்கள் தெரிவித்தனர்.

                    எனவே தாங்கள் செலுத்திய பணத்தைத் த்ருப்பித் தரக்கோரி கிராம பொது சேவை மைய முகவர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த உண்ணாவிரத்துக்கு முகவர்கள் சங்க பொறுப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior