உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு பணியிலிருந்து ஏ.பி.ஆர்.ஓ., விடுவிப்பு


கடலூர் :

           முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு புகார் எதிரொலியாக கடலூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளார்.

                கடலூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்தவர் நெடுமாறன். இவர் கடந்த ஒன்னரை ஆண்டு காலம் பி.ஆர்.ஓ., வாக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது விருத்தாசலத்தில் பொருட் காட்சி நடத்திய தனியார் நிறுவனத்திடம் முதல்வர் நிவாரண நிதிக்காக வசூலித்த1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அரசுக்கு செலுத்தாமல் "கோல் மால்' செய்துள்ளார். மேலும் அண்ணா நூற்றாண்டு விழா நடத்தியதாக ஒரு "பிட்' நோட்டீஸ் கூட அடிக்காமல் 15 ஆயிரம் ரூபாய் "ஸ்வாகா' செய்து விட்டதாக நெடுமாறன் மீது புகார் எழுந்தது.துறை இயக்குனரின் உத்தரவின் பேரில் கடந்த மாதம் துறை ரீதியாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறப் பட்டது.

              கடந்த சில நாட்களாக கிணற்றில் போட்ட கல்லாக இருந்த நிலையில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நெடுமாறனை பணியிலிருந்து உடனடியாக விடுவிக்குமாறும், பணியிடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இயக்குனர் காமராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனையடுத்து உடனடியாக நெடுமாறன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் இதே அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த ராமசாமி தேனி மாவட்டத்திற் கும், டிரைவர் முருகன் கோவை மாவட் டத்திற்கும் மாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலர் அதிரடியாக மாற்றப்படுவர் என தெரிகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior