உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

நெற்பயிரில் தேங்கிய தண்ணீர் வடியவடிகால் ஏற்படுத்த கோரிக்கை


பரங்கிப்பேட்டை:

                  நெற்பயிரில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய வடிகால் வசதி செய்து தரவேண்டும் என கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள் ளனர்.பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அரியகோஷ்டி, மானம்பாடி, குத்தாப்பாளையம், சில்லாங்குப்பம், அரிராஜபுரம், எஸ்.பி., மண்டபம், அகரம், கொள் ளுமேடு உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கடந்த காலங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் ஐந்து கண் மதகு வழியாக தண்ணீர் வடிந்துவிடும்.

                  தற்போது ஐந்து கண் மதகு அருகே நெடுஞ்சாலை துறையினர் பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டுவதற்காக தற்காலிக சாலை அமைத்து அதன் வழியாக போக்குவரத்து செல்ல ஏற்பாடு செய்தனர். இதனால் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால் தண்ணீர் வடிய வழியில்லாததால் நெற்பயிர் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நெற்பயிரில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய தற்காலிக சாலை வழியாக வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கலெக் டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior