கடலூர் :
கடலூர் மாவட்ட (கிழக்கு) அ.தி.மு.க.,வில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்தல் நாளை துவங்குகிறது.
இது குறித்து மாவட்ட செயலாளர்(கிழக்கு) எம்.சி.சம்பத் விடுத்துள்ள அறிக்கை:
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெ., உத்தரவிற்கிணங்க கடலூர் மாவட்டத்தில்(கிழக்கு) நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ளது. 4, 5 கட்டங்களுக் கான ஒன்றிய, நகர, பேரூர், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக் கான தேர்தல் நாளை (6ம் தேதி) துவங்கி 8ம் தேதி வரையிலும், 10 மற்றும் 11ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
கடலூர், நெல்லிக்குப் பம் நகரங்கள், கடலூர் தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியங்களுக்கு கடலூர் மஞ்சக்குப்பம் ஸ்ரீவிக் னேஷ் மகாலிலும், பண்ருட்டி நகரம், அண் ணாகிராமம் ஒன்றியம், தொரப்பாடி, மேல் பட் டாம்பாக்கம் பேரூராட்சிகளுக்கு புதுப்பேட்டை ஜெயபாலன் மகாலிலும், பண்ருட்டி ஒன்றியம் மற் றும் நெய்வேலி நகரியத் திற்கு நெய்வேலி இந்திரா நகர் ஸ்ரீராம் திருமண மண்டபத்திலும், விருத்தாசலம் நகரம், விருத்தாசலம் ஒன்றியம், நல்லூர் வடக்கு ஒன்றியம், மங்கலம்பேட்டை பேரூராட்சி பகுதிகளுக்கு விருத்தாசலம் ஆலடி ரோட்டில் உள்ள தெய்வம் திருமண மண்டபத்தில் நடக்கிறது.தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூர் அடையார் ஆனந்தபவனில் இன்று காலை 11 ணிக்கு நடக்கிறது. மாவட்ட தேர்தல் பொறுப் பாளர் வளர்மதி தலைமை தாங்குகிறார். மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் புரசை செல்வம் முன்னிலை வகிக்கிறார். இவ்வாறு எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக