நெல்லிக்குப்பம் :
வான்பாக்கம் கஸ்டம்ஸ் சாலை ஆக்ரமிப்புகளை வைத்துள்ளவர்கள் அதை எடுப்பதற்கு பதில் ஆற்றிலேயே சாலை அமைத்துள்ளனர்.
கண்டரக்கோட்டையில் இருந்து கடலூர் வரை பெண்ணையாற்றின் கரையோரம் கஸ்டம்ஸ் சாலை இருந் தது. இச்சாலை பயன்படுத்தப்படாததால் அருகில் உள்ள நில உரிமையாளர்கள் ஆக்ரமித்து நிலமாக மாற் றினர். ககன்தீப்சிங் பேடி கலெக்டராக இருந்த போது மேல்பட்டாம் பாக்கத்தில் இருந்து முள்ளிகிராம் பட்டு வரை மணல் சாலையை ஏற்படுத்தினார். அதன்பிறகு யாரும் கண்டு கொள்ளாததால் மீண்டும் ஆக்ரமிப்பு செய்தனர்.இந்த சாலை அமைந்தால் நெல் லிக்குப்பத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் முயற்சி மேற்கொண்டார். அதன்பேரில் அதிகாரிகள் பார்வையிட்டு ஒரு சில ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கிடையே அரசியல் குறுக்கீடு வரவே, ஆக்ரமிப்பு அகற் றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. எம்.எல்.ஏ., வின் கஸ்டம்ஸ் சாலை கனவு நனவாகவில்லை. புதுச்சேரி அரசு சார்பில் அப்பகுதி ஆற்றில் பாலம் கட்ட உள்ளதால் கஸ் டம்ஸ் சாலை அவசியமானது.
ஆக்ரமிப்புகளை அகற்றிய இடங்களை சேர்ந்தவர்கள் மற்ற பகுதியில் இப் பணி நடக்காததால் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஸ்டம்ஸ் சாலையை மீண்டும் ஆக்ரமித்துள்ளனர். அதற்கு பதிலாக ஆற்றின் உள்ளேயே இயந்திரம் மூலம் மணலை கூட்டி செம்மண் அடித்து சில ஆயிரம் செலவில் சாலை அமைத்துள்ளனர்.கரையை பலவீனப்படுத்தி ஆற்றிலேயே சாலை அமைத்துள்ளதை அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். ஒரு இடத்தில் கரையை முற்றிலும் எடுத்ததால் வெள்ளம் நீர் ஊரினுள் புகும் அபாயமும் உள்ளது.பல லட்சம் மதிப்புள்ள அரசின் இடத்தை தனி நபர்கள் அபகரித்து கொள்ள ஆற்றிலேயே சட்டத்துக்கு புறம்பாக சாலை அமைத்துள்ளனர். இதனை அகற்ற கஸ்டம்ஸ் சாலையை முழுமையாக அமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக