சிதம்பரம் :
தெற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஐந்து நாட்கள் நடக்கும் ஆண்கள் டென்னிஸ் போட்டி சிதம்பரத்தில் நேற்று துவங்கியது. தெற்கு மண்டல பல்கலைக் கழகங்கள் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் போட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நேற்று துவங்கியது. கல்வி புலமுதல்வர் மங்கையர்கரசி தலைமை தாங்கினார்.
பதிவாளர் ரத்தினசபாபதி, சாரதாராம் உரிமையாளர் சுவேதகுமார் போட்டியை துவக்கி வைத்தனர். தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து 40 பல்கலைக் கழகங்களை சேர்ந்த 200 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் ஆந்திர பல்கலை அணி, ஆச்சாரியா நாகார்ஜூனா பல்கலை அணியை (3-0) என்ற கணக்கிலும், டாக்டர் என்.டி.ஆர்., பல்கலை அணி, பாரதிதாசன் பல்கலை அணியை (3-0) என்ற கணக்கிலும், பி.எஸ்., அப்துல் ரகுமான் பல்கலை அணி, மனோன்மணியம் சுந்தரனார் பல் கலை அணியை (3-0) என்ற கணக்கிலும், அண்ணா பல்கலை அணி, ஜே.என்.டி., அணியை (3-0) என்ற கணக்கிலும் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின.திருவள்ளுவர் பல்கலை, புதுச்சேரி பல்கலை, ஸ்ரீகிருஷ்ணதேவராயர் பல்கலை, பாரதியார் பல்கலை, கேரள பல்கலை, மதுரை காமராஜ் பல் கலை ஆகிய அணிகள் தங்களுடன் மோத வேண்டிய அணிகள் பங்கேற்காததால் நேரடியாக இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக