உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

அரவைக்கு கரும்பு கிடைக்காமல் அதிகாரிகள் திணறல்! கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பரிதாப நிலை

சேத்தியாத்தோப்பு :

                   சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பை தேடி அலையும், அதிகாரிகளுக்கும், விலையை விரும்பும் விவசாயிகளுக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருகிறது.

                    கடந்த 1989ம் ஆண்டு திறக்கப் பட்ட சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை இப்பகுதி விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. சில ஆண்டுகள் முன்பு வரை அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில தவறுகள் நடந்த போதும் கரும்பு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் ஆலையின் அரவை திறனான 2.5 லட்சம் டன்னையும் தாண்டி ஆண்டுக்கு 5 லட்சம் டன் வரை கரும்பு அரவை நடந்தது.

                   கடந்த மூன்று ஆண்டுகளிலும் சோழத்தரம், பேரூர், ஆலைப்பகுதி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ் ணம், புவனகிரி, சிதம்பரம், காட் டுமன்னார்கோவில் ஆகிய எட்டு கரும்பு கோட்டங்களில் பணி புரிந்த அதிகாரிகளின் சுயநல போக்கு மற்றும் அரசியல் காரணங்களினாலும் ஒவ்வொரு கரும்பு கோட்டத்திலும் ஒரு வகையில் கரும்புத்துறை முற்றிலுமாக சீரழிந்தது. இதன் எதிரொலியாய் எழுந்த புகாரில் தவறுகளை கண்டு கொள்ள மறுத்த தலைமை கரும்பு அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

                      இதனிடையே கடந்த ஆண்டு ஆலை அரவைக்கு தேவையான அளவுக்கு கரும்பு பயிரிட்ட விவசாயிகள் பதிவு செய்ய மறுத்தனர். பெரும்பாலான விவசாயிகள் மாற்றுப் பயிருக்கே மாறிவிட்டனர். இச்சூழலில் சேத்தியாத் தோப்பு சர்க்கரை ஆலைக்கு எங் கள் பகுதி கரும்புகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று 2000ம் ஆண்டில் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது கடும் கெடுபிடிகளை விதித்ததால் அப்பகுதி விவசாயிகள் தனியார் ஆலைக்கு தங்கள் கரும்புகளை வெட்டி அனுப்பி வைத்தனர்.

                             இந்த ஆலை விவகார எல்லையில் கரும்பு குறைந்து போனதால் தங்களை தற்காத்து கொள்ள ஆண்டிமடம் பகுதியில் கரும்பு கோட்ட அலுவலகம் அமைத்து விவகார எல்லையை விஸ்தீரனம் செய்து கொண்டது எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை.இதனை நீதிமன்ற உத்தரவின் படி உறுதி செய்து கொண்ட போதிலும் கடந்த கால கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு எம்.ஆர்.கே. ஆலைக்கு கரும்பு அனுப்ப ஆண்டிமடம் பகுதி விவசாயிகள் மறுத்து வருகின்றனர்.

                           கடந்த ஒரு வாரமாக ஆண்டிமடம், நாகம்பந்தல், விழுதுபடையான், கிளிமங்கலம், ஒலையூர் ஆகிய ஊர்களில் சேத்தியாத் தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஒட்டுமொத்த கரும்பு அதிகாரிகள், கரும்பு உதவியாளர்கள் பகுதி பகுதியாக முகாமிட்டு கரும்பை பதிவு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எங்கள் ஆலைக்கு அனுப்பி வையுங்கள் என்று மன்றாடியும் அதற்கு அப்பகுதி விவசாயிகள் செவிசாய்க்கவில்லை.

                       தங்களது திறமையின்மையை மறைக்க கரும்புத்துறையின் தலைமை அதிகாரி (பொறுப்பு) ராஜதுரை தனது நிர்வாக பகுதியில் குறைந்த அளவு பயிரிடப்பட்டுள்ள கரும்பு அதிகாரி ரவிகிருஷ்ணன், ஜோதிமணி உள்ளிட்ட அனைத்து கரும்பு அலுவலர்களும் ஓலையூர், கிளிமங்கலம், விழுதுபடையான், ஆத்துக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு விவசாய சங்கத்தின் தலைவர் களை அழைத்து சென்று எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகளிடம் கரும்பை பெற பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.விவசாயிகளோ தனியார் ஆலையில் கூடுதல் விலை தருகிறார்கள் என்று காரணம் கூறி கரும்பை அனுப்ப மறுக்கின்றனர். அதிகாரிகளோ எப்படியாவது எம்.ஆர்.கே. ஆலையின் குறைந்த பட்ச அரவை திறன் அளவுக்காவது கரும்பை கொண்டு விட வேண்டும் என கரும்பை தேடி அலைகின்றனர். வெற்றி விவசாயிகளுக்கா... அதிகாரிகளுக்கா.. என்பது இந்த அரவை பருவம் முடிந்தால் தான் தெரியும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior