உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

குறிஞ்சிப்பாடி தொகுதியில் தொழிற்சாலை : அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

பரங்கிப்பேட்டை :

               சுயஉதவி குழுக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திட குறிஞ்சிப்பாடி தொகுதியில் தொழிற் சாலை அமைக்கப்படும் என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

                 புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை தாங் கினார். ஊராட்சி தலைவர் சங்கர் முன்னிலை வகித் தார். கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் வெங்கடேசன் வரவேற்றார். பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், இப்பகுதி மக்களின் 10 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த கிராமத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து திட் டங்களும் நிறைவேற்றப் பட்டுள்ளது.

               இங்கு 25 சுய உதவி குழுக்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 25 லட்சம் ரூபாய் தற்போது கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவி குழுக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த குறிஞ்சிப்பாடி தொகுதியில் விரைவில் தொழிற்சாலை அமைக் கப்படும். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி ஒவ்வொன்றாக நிறைவேற்றி தந்துள்ளார். அதனால் முதல்வருக்கு அனைத்து தரப்பினரும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றார்.விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மிருணாளினி, பரங்கிப்பேட்டை சேர்மன் முத்துப்பெருமாள், மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், குறிஞ்சிப்பாடி தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior