உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா 13ல் துவக்கம்


சிதம்பரம் : 

                சிதம்பரம் நடராஜர் கோவிலில் 29ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, வரும் 13ம் தேதி துவங்குகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
 
                         கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 1981ம் ஆண்டு, முதல் முறையாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி துவங்கியது. இந்த ஆண்டு 29வது நாட்டியாஞ்சலி விழா, வரும் 13ம் தேதி துவங்கி, 17ம் தேதி தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கின்றன. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தினசரி மாலை 5.30 மணிக்கு துவங்கி, இரவு 11.15 மணி வரை நடக்கிறது. துவக்க நாள் நிகழ்ச்சியன்று மகா சிவராத்திரி தினம் என்பதால், அன்று விடிய, விடிய நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நாட்டியக் கலைஞர்கள் தங்களின் நாட்டியத்தை நடராஜப் பெருமானுக்கு அஞ்சலியாக அர்ப்பணிக்கின்ற நிகழ்ச்சிதான் நாட்டியாஞ்சலி. இறை உணர் வும், அர்ப்பணிப்பு உணர்வும் நிறைந்திருப்பதால் மற்ற நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நாட்டியாஞ்சலி சிறப்பு பெறுகிறது. பாரதத்தின் பாரம்பரியம் மிக்க பரதம், குச்சுப்புடி, மோகினி ஆட்டம், கதக், சத்ரியா வகை நடன கலைஞர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்கின்றனர். மேலும்,  ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்கின் றனர். ஆண்டுதோறும் மகா சிவராத் திரி அன்று துவங்கி, ஐந்து நாட்கள் விமரிசையாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. இந்திய அரசு, தமிழக அரசின் சுற்றுலாத் துறை, டில்லி சங்கீத நாடக அகடமி ஆகியவை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஊக்குவித்து வருகின்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior