கடலூர் :
தினமலர் செய்தி எதிரொலியாக நெல்லிக்குப்பம் பஸ் நிலையம், மீன்கள் அருங்காட்சியகத்தை கடலூர் கலெக்டர் சீத்தாராமன் நேற்று ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2008ம் ஆண்டு நவ. 22ம் தேதி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது கடலூர் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தில் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுக்கு கூலி வழங்குவதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்ட ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைத்தார். கடலூர் நகராட்சி பூங்காவில் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அரிய வகை மீன்கள் அருங்காட்சியகத்தையும், நெல்லிக் குப்பத்தில் ஒரு கோடி செலவில் அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தையும் அவர் திறந்த வைத்தார். துணை முதல்வர் திறந்து வைத்த இவை மூன்றும் ஓரிரு மாதங்களில் முடங் கின. இதுகுறித்து நேற் றைய தினமலர் "டீ கடை பெஞ்ச்' பகுதியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கலெக்டர் சீத்தாராமன், ஆர்.டி.ஓ., ஜெயக்குமார், சேர்மன் கெய்க்வாட்பாபு மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் கூறுகையில்,"
சில நாட்களில் போலீஸ் நிழற்குடை, சிக்னல், ஹைமாஸ் லைட் வைக்கப்படும். அனைத்து பஸ்களும் உள்ளே செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையத்திற்குள் வராத டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய் யப்படும். பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண் டும்' என்றார். இரவு 7.15 மணிக்கு கடலூர் நகராட்சி பூங்கா வளாகத்தில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தை அவர் பார்வையிட்டார். அரிய வகை மீன்கள் இல்லாததைக் கண்ட கலெக்டர், அருங் காட்சியகத்தை பராமரித்து வரும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கடல் உயிரின உயராய்வு மைய போராசியர்கள் ராமமூர்த்தி, சங்கர் மற்றும் கடலூர் நகராட்சி கமிஷனர் குமார் ஆகியோரிடம் மீன் அருங்காட்சியகம் உரிய முறையில் இயங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். பள்ளி மாணவர்கள் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் கையேடு தயாரித்து வழங்க உத்தரவிட்டார். மீன் அருங்காட்சியகம் பெயர் பலகையை பெரிய அளவில் வைக்கவும், பூங்கா சுவற்றில் கடல் அமைப்பை வரைந்து, கடல் வாழ் உயிரினங்களை பற்றிய குறிப்புகளை எழுதிட உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக